Wednesday, April 21, 2010

தபு ஷங்கர் கவிதைகள் 2

நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள். 

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.

ஆனால்,

நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!

---------------------------------------------------------------------------------------------------------------

நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன். 

--------------------------------------------------------------------------------------------------------------

அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய். 

---------------------------------------------------------------------------------------------------------------

உனக்காகப் பிறந்தவள்,
உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்...
சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.
அந்த தேவ நிமிஷத்தில்
நீ தொலைந்துபோவாய்!

--------------------------------------------------------------------------------------------------------------

உன்னை காதலித்துகொண்டிருக்கும்
நான் இறந்து போவேனா என்பது தெரியாது
ஆனால் இறக்கும் போதும்
உன்னை காதலித்துகொண்டிருப்பேன் என்பது மட்டும் தெரியும்

--------------------------------------------------------------------------------------------------------------

உன்னை
ஏன் இப்படிக் காதலித்துத்
தொலைக்கிறேன்??????
அடிக்கிற
அம்மாவின் கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி.....

--------------------------------------------------------------------------------------------------------------

காற்றே
அவசரமொன்றுமில்லை....
அவள் சுவாசக் குழலை
சேதப்படுத்திவிடாமல்
சென்று வா...
அப்படியே
அவள் இதயத்தில்
எங்காவது நான்
இருக்கிறேனா என்பதையும்
பார்த்துவிட்டு வா !!!!!!!

---------------------------------------------------------------------------------------------------------------

உன்மேல் கோபப்படுகிறபோதெல்லாம்
கொஞ்ச நேரங்கழித்து
ஏன் கோபித்தோம் என்றிருக்கும்

அப்போதெல்லாம்
உன் மேலிருக்கிற அன்பு
இன்னும் அதிகமாகும்
ஆனால் நீயோ
இனிமே கோபம் வருகிற மாதிரி
எந்தத் தப்பும் செய்ய மாட்டேன் என்கிறாய்

இல்லையில்லை
தவறுகள் செய்துகொண்டே இரு

அன்பு அதிகரித்துகொண்டே
இருக்கட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------

உன்னிடம்
எந்த கெட்ட பழக்கமும்
கிடையாதென்பது
எனக்கு மகிழ்ச்சிதான்
எனினும்
வருத்தமாய் இருக்கிறது

நான் சொல்லி
நீ விட
ஒரு கெட்ட பழக்கம் கூட
இல்லையே உன்னிடம்

---------------------------------------------------------------------------------------------------------------

கடிகாரத்தை
திருடியவனையெல்லாம்
விரட்டி பிடித்திருக்கிறேன்
என் இதயத்தை
திருடி போகிறாய்
பேசாமல்
நின்றுகொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment