உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய்
இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க
வேண்டிய நாளில்லையடிஎன்
உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
--------------------------------------------------------------------------------------------------------------
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12
மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
--------------------------------------------------------------------------------------------------------------
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
-------------------------------------------------------------------------------------------------------------
தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஒருமுறைதான் பிறந்தாய் நீ
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!
-------------------------------------------------------------------------------------------------------------
நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்
கவிதைக்கும் உயிருண்டென!
Wednesday, April 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment